tamilnadu

img

ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் விகிதம் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தின் நுகர்வோர் பணவீக்க குறியீடு கடந்த 10 மாதங்கள் இல்லாத அளவுக்கு 3.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்க அளவீடுகளை நேற்று அறிவித்தது. அதில், சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 3.38 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.69 சதவீதமாக இருந்தது. அதே போல், ஆகஸ்ட் மாத உணவுப் பொருட்கள் பணவீக்கம் முந்தைய மாதத்தின் 2.36 சதவீதத்தில் இருந்து 2.99 சதவீதமாக அதிகரித்தது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய பிரிவாகும்.

ரிசர்வ் வங்கி நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தை 4 சதவீதமாக வைக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில் இதை அடைய முடியாமல் தவித்து வருகிறது. ஜூலை மாத தரவுகளை விட ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்திருந்தாலும், அவை சாமானியர்களைப் பாதிக்கும் உணவுப் பொருட்களில் மீதான விலை உயர்வில் ஏற்பட்ட தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.